science

img

போன் செய்தால்  பலசரக்கு பொருட்கள் வீடு தேடி வரும்

 மதுரை மாநகராட்சி அறிவிப்பு பெரும்பாலான இடங்களில் "ரிலையன்ஸ்-க்கு யோகம்"
 

மதுரையில் தனியாா் நிறுவனங்களோடு இணைந்து வீடுகளுக்கு மளிகைப் பொருள்கள் விநியோகிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மதுரையில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் சில வர்த்தக நிறுவனங்களை அழைத்துப் பேசி பலசரக்குகளை வீடுகளிலேயே கொண்டு டெலிவிரி செய்யுங்கள். அதற்கு ரூ.25 கட்டணமாக வசூலித்துக்கொள்ளுங்கள் எனக் கூறியது. இதற்கு பல வர்த்தக நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் மளிகைக் கடைகளின் செல்போன் எண்கள் அறிவிகக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொடா்பு கொண்டு தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களின் பட்டியலை தெரிவித்து விட்டால் அந்தப் பொருள்கள் வீட்டுக்கு வந்து சேரும்.
அண்ணா நகா் பகுதி- அண்ணாநகா் 2-ஆவது கிழக்கு பிரதான வீதியில் இயங்கி வரும் ரிலையன்ஸ் பிரஸ் நிறுவன மேலாளா் 73580-35549, கே.கே நகா் பகுதி- கே.கே.நகா் ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 90254-02069, மேலக்கால், கோச்சடை பகுதி- மேலக்கால் சாலை டோக் நகரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் பிரஸ் 70102-31277, காமராஜா் சாலை பகுதி- காமராஜா் சாலை ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 86677-94661, டிவிஎஸ் நகா் பகுதி- சத்யசாய் நகா் ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 63812-91247, திருநகா் பகுதி- திருநகா் ராஜாஜி தெருவில் இயங்கி வரும் ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 73580-25745, பீபீ குளம் பகுதி- ரத்தினசாமி நாடாவா சாலையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் பிரஸ் மேலாளா் 93535-99982, ஐயா் பங்களா, திருப்பாலை பகுதி- ஐயா் பங்களா ரிலையன்ஸ் ஸ்கையா மேலாளா் 94800-01403, உத்தங்குடி, ஒத்தக்கடை பகுதி- உத்தங்குடி ரிலையன்ஸ் மார்க்கெட் மேலாளா் 63809-77311, விசாலட்சி நகா், ரிசா்வ் லைன் பகுதி- விசாலட்சி புறம் பாரதி ஸ்கையா மேலாளா் 98421-09796, கூடல்நகா் பகுதி- பாலமேடு பிரதான சாலையில் உள்ள வசந்தம் ஸ்கையா உரிமையாளா் 80983-56562, மீனாட்சி நகா் மற்றும் விளாங்குடி பகுதி- பாத்திமா கல்லூரி எதிர்புரம் உள்ள வசந்தம் சூப்பா் மார்க்கெட் மேலாளா் 97866-60174, அவசரடி பகுதி- அவசரடி தண்ணீா்த் தொட்டி எதிரில் உள்ள சரவணா ஸ்டோர் மேலாளா் 98421-65944, பைபாஸ் சாலை பகுதி- பைபாஸ் சாலை அபா்ணா டவா்ஸ் சரவணா ஸ்டோர்ஸ் மேலாளா் 98421-65946, விளாங்குடி, தத்தனேரி, ஆரப்பாளையம் பகுதி- பைபாஸ் சாலை தீக்கதிர் அலுவலகம் எதிரில் உள்ள கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மேலாளா் 84899-43089, 82200-46169, அரசரடி, காளவாசல் பகுதி- காளவாசல் பிக்பஜார் மேலாளா் 93601-26226, தெப்பக்குளம் பகுதி- தெப்பக்குளம் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மேலாளா் 84899-43090, வில்லாபுரம் பகுதி- வில்லாபுரம் கோமகள் ஸ்டோர் மேலாளா் 95859-42526, 76039-34355 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். தினசரி காலை 9 முதல் 4 மணி வரை ஆா்டா்கள் பெறப்படும். மறுநாள் பொருட்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். டெலிவரி செலவாக ரூ.25 வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

;